ஒரு நாள் விடுமுறை இந்த நாள் நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, நவம்பர்,2021,10 தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை நடந்த ஒரு நிகழுச்சிக்கு செல்லும் போது நடந்த ஒரு நிகழ்வு இதனை கதையாக தொகுத்து உள்ளேன் பேருந்து நிலையம் இரவு நேரத்தில் நாங்கள் நண்பனின் தங்கச்சியின் மஞ்சள் நீராட்டுவிழா அதற்காக புறப்பட்டேம் , கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து அடைந்தோம், பிறகு சில புகைப்படம் எடுத்துக் கொண்டு நண்பனின் பேருந்துக்கா பேருந்து நிலையத்தில் கத்திருந்தோம் நள்ளிரவு 1.30 மணிஆகிவிட்டது. அவன் ஊருக்கு தாமதமாக பேருந்து ஒன்று வந்து, அதில் ஏற்றி புறப்பட்டோம், நானும், எனது நண்பன் சின்னராசு, மற்றும் அஜய் மூன்று பெயரும் ஒரே இருக்கையில் அமர்ந்துக் கொண்டேம், பேருந்து கிளம்பிவிட்டது, சிறிது நேரத்திலே இவர்கள் உறங்க ஆரம்பித்து விட்டார்கள்,ஆனால் எனக்கோ உறக்கமில்லை, சன்னல் வழியே...